யுகாதி என்றாலே யுகத்தின் ஆதி, ஆதாவது புதிய யூகம் ஆரம்பம் என்று அர்த்தம்
இப்பண்டிகையை கர்நாடக, ஆந்திர, மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது
இந்த புத்தாண்டின் நாளானது, வசந்த காலத்தின் துவக்கத்தையும், குளிர் காலம் முடிவையும் குறிக்கின்றது
ஒவ்வொரு பண்டிகை கொண்டாட்டத்திலும் ஆன்மிக கருத்துக்கள் இருப்பது உண்மையே
புதிய விளைச்சல் எல்லாவற்றிலும், மேலும் புளியோதரை, பணியாரம், பாயசம், மாங்காய், வேப்பம்பூ, புளி ஆகிய சேர்த்து பச்சடி செய்து பகவானுக்கு படைத்தது வழிபடுவார்கள்
யுகாதின் மற்றொரு பொருள், இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என அறுசுவையும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை நமக்கு உணர்த்துகின்றன
வேப்பிலை மற்றும் வெல்லம் கலந்து சாப்பிடுவதுண்டு, கசப்பான மற்றும் இனிப்பான அனுபவம் இரண்டுமே வாழ்வில் இருப்பதை உணர்த்தும் விதமாக இருக்கின்றது
மாங்கா, வேப்பிலை, புளி, வெல்லம் இவை எல்லாம் கரைத்து பானகம் போல செய்து குடிப்பதுண்டு
வாழ்வில் புளிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய அனைத்து அனுபவங்களை, வெல்லம் என்ற இனிப்பு அடங்கிவிடும் என்பதுதான் இந்த பானத்தின் அர்த்தம் ஆகும்
யுகாதி புதிய ஆண்டின் துவக்கத்தில், ஆத்தும, உடல் மற்றும் மனதையும், வீட்டையும், சுற்றியுள்ள எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள, பண்டிகையின் முந்தைய நாள் சுத்தம் செய்கின்றனர்
தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்களுடன் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்