வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களை கொண்டு சுவையில் காரமும் மணமும் நிறைந்த சிக்கன் சில்லி ஃப்ரை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 1 கிலோ, வெங்காயம் - 1/2 கிலோ, தக்காளி - 3, விதை நீக்கிய வரமிளகாய் - 8, முழு பூண்டு - 1, மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், நெய் அல்லது டால்டா- 3/4 கப், வினிகர் - 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு
செய்முறை: கோழிக்கறியை தோல் நீக்கி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். வரமிளகாய், பூண்டு, வினிகர் சேர்த்து மென்மையாக அரைத்து கொள்ளவும்
கரித்துண்டுகளை உப்பு, மஞ்சள்தூள், அறத்தை விழுது சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்
ஊறிய கோழிக்கறியை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேகவைக்கவும்
ஒரு வாணலியில் நெய் அல்லது டால்டா ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துவைக்கவும்
பின்னர், வேகவைத்த கோழிக்கறியை போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். இப்போது வதக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து எல்லாம் ஒன்றாக கலந்து சற்று 1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்
காரமும் சுவையும் நிறைந்த சிக்கன் சில்லி ஃப்ரை சாதம், ரொட்டி அல்லது ஸ்நாக்ஸாகசாப்பிட அருமையாக இருக்கும். கண்டிப்பாக ஒரு முறை ட்ரை பண்ணுங்க.