Tap to Read ➤

தலை தீபாவளியை கொண்டாடும் நட்சத்திர ஜோடிகள்!

தலை தீபாவளி கொண்டாட உள்ள நட்சத்திர ஜோடிகள்  குறித்து பார்ப்போம்.
HTML Tamil
முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தித்திக்கும் தீபாவளி பண்டிகை, 24-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திருமணமான ஜோடிகள், இந்த தீபாவளியை, தலை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில், தலை தீபாவளியை கொண்டாடும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
திருமணமான சில மாதங்களிலேயே, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த இந்த ஜோடிக்கு, இந்த தலை தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும்.
கடந்த ஜூன் மாதம் திருமணமான மற்றொரு நட்சத்திர ஜோடியான ஆதி - நிக்கி கல்ராணியும், தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
பரபரப்பாக பேசப்பட்ட மற்றொரு நட்சத்திர ஜோடியான ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியும், தலை தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன புகழ் - பென்ஸி ஜோடியும், தலை தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
திருமணம் என்ற டிவி சீரியலில் நடிக்கும்போது, காதலித்து திருமணம் செய்துகொண்ட சித்து - ஸ்ரேயாவுக்கும் இதுதான் தலை தீபாவளியாகும்.
விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து அசத்திய நடிகை காயத்திரி, தனது காதலனை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கும் இதுதான் தலை தீபாவளி.