Tap to Read ➤

ராஜமௌலி இயக்கிய படத்தில் நடிக்க மறுத்த நட்சத்திரங்கள்..!!

இந்த நட்சத்திரங்கள் நிராகரித்த கதாப்பாத்திரம் எது தெரியுமா?
Sidhanathan K
1. ஸ்ரீதேவி கபூர்

நிராகரித்த கதாப்பாத்திரம் - பாகுபலி படத்தில் 'ராஜமாதா சிவகாமி தேவி'.

புலி படத்தின் ராணி கதாப்பாத்திரம் தோல்வியுற்ற நிலையில் நிராகரித்துள்ளார்.
2. லட்சுமி மஞ்சு

நிராகரித்த கதாப்பாத்திரம் - பாகுபலி படத்தில் 'ராஜமாதா சிவகாமி தேவி'.

நடிகை ஸ்ரீதேவிக்கு பின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என இவரும் நிராகரித்துள்ளார்.
3. சூர்யா சிவகுமார்

நிராகரித்தது - பாகுபலி படத்தில் ஒரு கதாபாத்திரம்.

படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கான அழுத்தம் குறைவாக இருக்கிறது என நிராகரித்துள்ளார்.
4. ஷ்ரத்தா கபூர்

நிராகரித்த கதாப்பாத்திரம் - ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடி.

அச்சமயம் இவருக்கு பல படப்பிடிப்பு நெருக்கடிகள் இருந்ததால் இந்த வாய்ப்பினை நிராகரித்துள்ளார்.
5. மோகன்லால்

நிராகரித்த கதாப்பாத்திரம் - பாகுபலி படத்தில் 'கட்டப்பா'.

துணை நடிகராக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என நிராகரித்துள்ளார்.
6. அமிதாப் பச்சன்

ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஹிந்தி மொழியில் டப்பிங் பேசுவதற்கு இவரை அணுகியுள்ளார். ஆனால் இவர் நிராகரித்துள்ளார்.
7. ஹ்ரிதிக் ரோஷன்

நிராகரித்த கதாப்பாத்திரம் - பாகுபலி படத்தின் நாயகன்.

சரித்திர படங்களில் தற்போது நடிக்க விருப்பம் இல்லை என நிராகரித்துள்ளார்.
8. விவேக் ஓபராய்

நிராகரித்த கதாப்பாத்திரம் - பாகுபலி படத்தின் வில்லன்.

சில காரணங்களால் இந்த வாய்ப்பினை விவேக் ஓபராய் நிராகரித்துள்ளார்.
9. ஜான் ஆப்ரஹாம்

நிராகரித்த கதாப்பாத்திரம் - பாகுபலி படத்தின் வில்லன்.

விவேக் ஓபராய்க்கு பின் சில காரணங்களால் இவரும் இந்த வாய்ப்பினை நிராகரித்துள்ளார்.