வயிறு பொறுமலுக்கு, வெற்றிலை, ஓமம், இரண்டையும் இடித்து அந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடனடியாக சரியாகும்
தீராத வயிற்றுபுண், தொண்டைப்புண் குணமாக, தினமும் தேங்காய் பால் கொப்பளித்து குடித்தால், விரைவில் புண் ஆறிவிடும்
வாய் புண் குணமாக, தேங்காய்ப்பாலுடன் தேன் கலந்து குடிக்கலாம், அல்லது ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் விரைவில் குணமாகும்
வாய் புண் ஆற மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டை தனித்து, புண் ஆறிவிடும்
பச்சை மாஇலையை நெருப்பில் போட்டு, அதில் வரும் புகையை வாய் திறந்து பிடிக்க, தொண்டை கமறல், தொண்டைக்கட்டு சரியாகும்