Tap to Read ➤

வடகொரியா நாட்டின் பின்பற்றப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் !!

வடகொரியா நாட்டில் மிரள வைக்கும் சட்டங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள்!!
Sidhanathan K
வடகொரியாவின் தற்போதைய அதிபராக கிம் ஜாங்-உன் உள்ளார். உலகையே திரும்பிப் பார்க்க வைப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடு வட கொரியா.
வட கொரியாவில், வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பது அல்லது வெளிநாட்டு இசையைக் கேட்பது சிறை தண்டனை விதிக்கப்படும்.
அந்த நாட்டின் குடிமகன் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால், அவரது பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் அவரது குழந்தைகள் உட்பட தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அனைத்து ஆண்களும் பெண்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும், பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 10 மட்டுமே.
வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு சாதாரண மக்கள் வசிக்கக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு பைபிள் விநியோகம் செய்து கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ பெண் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மக்கள் மதம் மாறுவார்கள் என்ற அச்சம் காரணமாக இந்த சட்டம் விதிக்கப்பட்டது.
மின்சார தட்டுப்பாடு காரணமாக அங்கு இரவு நேரங்களில் மின்தடை அமலில் இருக்கும்.
ராணுவத்தில் ஆண்கள் 10 ஆண்டுகளும், பெண்கள் 7 ஆண்டுகளும் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு பிறகே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வடகொரியாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் எப்போதும் வழிகாட்டியுடன் இருப்பார்கள்.
வடகொரியாவில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் விற்பனை செய்வதும் குற்றமாகும்.
17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால் அதிபர் கிம் மட்டுமே வேட்பாளராக இருப்பார். அவரை தான் மக்கள் தேர்ந்தெடுதாக வேண்டும்.
ஐபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற உபகரணங்களை வடகொரியாவில் பயன்படுத்த முடியாது. இந்த கொடூரமான சட்டங்கள் உலகின் பிற பகுதிகளிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளன.
இங்கு 3 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன. கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகள் வளர்க்க முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.