Tap to Read ➤

சாப்பிடுவது குறித்த தமிழின் நுட்பமான வார்த்தைகள் !!

சாப்பிடுவதன் அர்த்தத்தின் அருமையான விளக்கம்!!
Sidhanathan K
அருந்துதல் - மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுவது (மருந்து)
குடித்தல் - பசி நீங்க நீரியல் பண்டங்களை உட்கொள்ளுவது (கஞ்சி)
தின்னல் - சுவைக்காக ஓரளவு தின்னுவது (முறுக்கு)
பருகல் - நீரியல் பண்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பது (குளிர்பானம்)
விழுங்கல் - தொண்டை வழி உட்கொள்ளுவது (மாத்திரை)
உண்ணல் - பசி தீர உட்கொள்ளுவது.
உறிஞ்சல் - வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை உள் இழுப்பது.
துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுவது.