Tap to Read ➤

கரும்புச் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!

இயற்கையாக கிடைக்கும் கருப்புச் சாற்றில் எண்ணற்ற நற்பலன்கள் உள்ளன.
HTML Tamil
கருப்புச் சாற்றை பருகினால், உடலுக்குத் தேவையான ஆற்றலை தருவதோடு, இளமையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவுகிறது.
கரும்புச்சாற்றில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுவதால், தொண்டைப்புண், எரிச்சல், வயிற்றுப் புண்களை குணமாக்குகிறது.
கரும்புச் சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால், உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். மேலும், உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக இருக்க இது உதவுகிறது.
கரும்புச் சாற்றை குடித்து வந்தால், வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும், செரிமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கிறது.
சிறுநீரகக் குழாய் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள் பிரச்சனைக்கு கரும்புச் சாற்றுடன், எலுமிச்சை மற்றும் தேங்காய் தண்ணீரை சேர்த்து குடித்தால் குணமாகும்.
வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் கரும்புச் சாற்றை குடித்து வந்தால், துர்நாற்றம் போகும். மேலும், பற்கள் வலிமை பெறுவதற்கும் கரும்புச் சாறு உதவுகிறது.
உடல் சோர்த்தும், மெலிந்தும் காணப்படுபவர்கள், கரும்புச் சாற்றை அடிக்கடி குடித்து வந்தால், உடல் எடை படிப்படியாக கூட வாய்ப்பு ஏற்படும்.
கரும்புச் சாறு, புற்று நோயை எதிர்த்து போராடி, கேன்சர் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
கரும்புச் சாற்றுடன், எலுமிச்சை சாற்றை கலந்து பருகி வந்தால், சிறுநீரக தொற்று வியாதிகள் விரைவில் குணமடையும்.
கரும்புச் சாறு மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.