Varalakshmi N       Sep 22, 2025

 இஞ்சி எண்ணெயின் ஆச்சரிய நன்மைகள்: உடலும், முடியும் ஆரோக்கியமும்!

இஞ்சி இயற்கை மருத்துவத் தன்மைகளால் பழைமையான மருந்தாகக் கருதப்படுகிறது. சில இயற்கை சேர்மங்களோடு சேர்த்து பயன்படுத்தினால் பல     நன்மைகளை தருகிறது

மூட்டுவீக்கம், தலைவலி, வயிற்று பிடிப்பு, வயிறு சம்பந்தமான     கோளாறுகளில் நல்மருந்தாக செயல்படுகிறது

கொதிக்க வாய்த்த நீரில் 2-3 சொட்டு இஞ்சி எண்ணெய் கலந்து நீராவி     பிடித்து வந்தால் தலைவலி, சளி பிரச்சனை குறையும்

சிறிதளவு இஞ்சி என்னை. வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து தரையை துடைத்தால் பிசுபிசுப்பு நீங்கி வீடு சுத்தமாக இருக்கும்

தலை முடிக்கு பயன்படுத்தப்படும் கண்டிஷனருடன் சிறிதளவு இஞ்சி எண்ணெய் கலந்து தேய்த்து தலை குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும், முடி நன்றாக பராமரிக்கப்படுகிறது

வீட்டிலேயே எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த எண்ணெய் ஆகும்