Tap to Read ➤

மூன்றாவது கண் எனப்படும் பீனியல் சுரப்பி பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!

பீனியல் சுரப்பி (கூம்புச் சுரப்பி) -ஐ ஏன் மூன்றாம் கண் என்கிறார்கள்..?
Sidhanathan K
மூன்றாவது கண் என அழைக்கப்படும் பீனியல் சுரப்பி (5-8 மிமீ நீளம்) மூளையின் இரு சமபாகங்களின் நடுவே (புருவ மத்தி) காணப்படுகிறது. இந்த சுரப்பி சிறிய பட்டாணி அளவு கூம்பு வடிவமானது.
இது அஜ்னா எனப்படும் நெற்றிச் சக்கரத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது, இது நெற்றிக் கண்ணைத் திறப்பதன் மூலம், முன்னறிவிப்பு ஞானம் போன்றவைகள் தோன்றும் என்று நம்பப்படுகிறது.
உடலில் உள்ள மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.. ஆங்கிலத்தில் "Soul Seed" என்பார்கள். இந்த பினியல் சுரப்பி மூலம் நாம் நமது ஆன்மாவை (Energy Body) அடைய முடியும்.
இதனைத் தான் பிரான்ஸ் அறிவியல் நிபுணரான Rene Descartes (1596-1650) பினியல் சுரப்பியை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார்.
பீனியல் சுரப்பியானது மெலடோனின் என்ற திரவத்தை சுரக்கிறது. இந்த மெலடோனின் ஹார்மோன் நமது தூக்கம் மற்றும் விழிப்புநிலை பருவகால மாற்றங்களை ஒழுங்குபடுத்துகிறது.
இந்த திரவம் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் வைரஸ்கள் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கிறது.
இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனின் சுரக்கிறது. இதனால் தான் இரவில் சீக்கிரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர்.
மெய்ஞ்ஞான/மாய அமைப்புகளில் மூன்றாவது கண் ஞானத்தை அடையும் பாதையாகக் கருதப்படுகிறது. திராடகா (Trataka) எனும் யோக முறையின் மூலம் மூன்றாவது கண்ணின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.
அதே போல திபெத்தில் இந்த மூன்றாம் கண்ணை திறக்க சிறப்பு பயிற்சி முறைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திராடகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நமது கண்பார்வை தெளிவாகும். அதுமட்டுமின்றி, இது பீனியல் சுரப்பி சார்ந்த பயிற்சி என்பதால், தூக்கமின்மை, மன அழுத்தம், கவனக்குறைவு போன்றவற்றையும் தீர்க்கிறது.
இந்த மூன்றாவது கண்ணைத் தூண்டுவதன் மூலம் மூன்று பருவங்களைப் பற்றிய அறிவை அடையலாம் என்று கூறப்படுகிறது.