உடலில் நீர்ச்சத்தின் அளவை சரியாக பராமரிக்காவிட்டால் தலைவலி, பசியின்மை, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
பொதுவாக நமது உடலில் 50 முதல் 60 சதவீதம் வரையிலும் நீர் இருப்பது அவசியம்.
கோடைக்காலங்களில் அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் நமது உடல் உள்ளுறுப்புகள் இயங்குவதற்கு தேவையான நீர்சசத்து குறைந்துவிடும்.
நீரிழப்புக்கான காரணங்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிக வியர்வை, அதிக சிறுநீர் கழித்தல், காய்ச்சல் மற்றும் போதுமான தண்ணீர் குடிக்காதது.
அதிக தாகம், உதடுகள் வறண்டு போவது, சோர்வு, தலைவலி, மயக்கம் போன்றவை நம் உடலில் நீர்ச்சத்து இல்லாததைக் காட்டும் அறிகுறிகளாகும்.
இத்தகைய நீரிழப்பு பொதுவாக வயதானவர்களுக்கு மிகவும் ஆபத்தானது.
அதேபோல், இந்த நீரிழப்பு காரணமாக கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே, நீரிழப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.