நம் உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. அந்த வகையில், இதய ஆரோக்கியத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
உலகளவில் அதிகமான இறப்புக்கு இதய நோய் முக்கிய காரணமாகும்.
பொதுவாக, குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் அல்லது இதயப் பிரச்சனை இருந்தால், உங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
உடலில் இரத்த சர்க்கரை அளவு சீரற்றதாக இருந்தால், இதயத்தை கவனித்துக்கொள்வது அவசியம்.
ஏனென்றால் அதிகப்படியான இரத்த சர்க்கரை இரத்த நாளங்களை சேதப்படுத்துகின்றன.
இதயம் தொடர்பான சுவாசப் பிரச்சனைகள் பெரும்பாலும் வீட்டு வேலைகள் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற குறைந்த அளவிலான உடல் செயல்பாடுகளால் தூண்டப்படுபவையாகும்.
எனவே, அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
திரும்பத் திரும்ப வரும் நெஞ்சுவலிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். சாதாரணமானது என்று புறக்கணிப்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
பொதுவாக, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
கொலஸ்ட்ரால் அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதை கண்டறிந்தால் இதய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மற்றும் உடல்செயல்பாடு இல்லாமல் இருப்பது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த சமயங்களில் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.