Tap to Read ➤

T20 உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 10 பவுலர்கள்!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
HTML Tamil
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்கி அடுத்த மாதம் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
8-வது முறையாக நடைபெறும் இந்தத் தொடரில், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி, ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வீரர்கள் தயாராக உள்ளனர்.
சவாலான இந்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களை பற்றி இப்போது பார்ப்போம்.
பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹாசன், 30 போட்டிகளில் பங்கேற்று, 41 விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டரான ஷாஹித் அப்ரிடி, 34 போட்டிகளில் பங்கேற்று, 39 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-ம் இடத்தில் உள்ளார்.
இலங்கையின் வேகப்பந்து வீச்சாளார் லசித் மலிங்கா, டி20 உலகக்கோப்பையில் 31 போட்டிகளில் பங்கேற்று 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளார் சயீத் அஜ்மல், 23 போட்டிகளில் 36 விக்கெட்டுகளை எடுத்து, 4-ம் இடத்தில் உள்ளார்.
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் வெறும் 21 போட்டிகளில் மட்டும் பங்கேற்று, 35 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளாளர் உமர் குல், 24 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை எடுத்து, டாப் 10 வரிசையில் 6-ம் இடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்து ஜாம்பவான் டேல் ஸ்டைன், 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை எடுத்து 7-ம் இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட், 26 போட்டிகளில் கலந்துகொண்டு 30 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தப் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ, 34 போட்டிகளில் பங்கேற்று 27 விக்கெட்டுகளை எடுத்து 9-ம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் அஸ்வின் 18 போட்டிகளில் கலந்துகொண்டு 26 விக்கெட்டுகளை எடுத்து 10-ம் இடத்தை பிடித்துள்ளார்.