புதிதாக வாங்கும் வாகனம் அல்லது ஏற்கனவே உள்ள வாகனத்திற்கு வாகன பதிவு எண் மிகவும் முக்கியமானது. பதிவு எண் இருப்பதால் வாகனம் தொலைந்து போனால் அதை கண்டுபிடிப்பது எளிதாகும்.
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, அனைத்து வாகனங்களிலும் TN என்ற எழுத்து இருக்கும். அடுத்த இரண்டு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்ட மற்றும் சாலை போக்குவரத்து அலுவலகத்தை குறிக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாகன பதிவு எண் ஒதுக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 88 ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. அந்தவகையில் தமிழ்நாட்டின் வாகன பதிவு எண்களின் விவரங்களை பார்ப்போம்.
சென்னை (TN01-10), தாம்பரம் (TN 11), பொன்மலை (TN 12), அம்பத்தூர் (TN 13), சோழிங்கநல்லூர் (TN 14) உளுந்தூர்பேட்டை (TN 15), திண்டிவனம் (TN 16), ரெட் ஹில்ஸ் (TN 18), செங்கல்பட்டு (TN 19), திருவள்ளூர் (TN 20), காஞ்சிபுரம் (TN 21).
மீனம்பாக்கம் (TN 22), வேலூர் (TN 23), கிருஷ்ணகிரி (TN 24), திருவண்ணாமலை (TN 25), நாமக்கல் வடக்கு(TN 28), தர்மபுரி (TN 29), சேலம் மேற்கு (TN 30), கடலூர் (TN 31), விழுப்புரம் (TN 32), ஈரோடு கிழக்கு (TN 33), திருச்செங்கோடு (TN 34).
கோபிசெட்டிபாளையம் (TN 36), கோயம்புத்தூர் தெற்கு (TN 37), திருப்பூர் வடக்கு (TN 39), மேட்டுப்பாளையம் (TN 40), பொள்ளாச்சி (TN 41), திருப்பூர் தெற்கு (TN 42), ஊட்டி (TN 43) திருச்சி மேற்கு (TN 45), பெரம்பலூர் (TN 46), கரூர் (TN 47).
ஸ்ரீரங்கம் (TN 48), தஞ்சாவூர் (TN 49), திருவாரூர் (TN 50), நாகப்பட்டினம் (TN 51), சங்ககிரி (TN 52), சேலம் கிழக்கு (TN 54), புதுக்கோட்டை (TN 55), பெருந்துறை (TN 56), திண்டுக்கல் (TN 57), மதுரை தெற்கு (TN 58), மதுரை வடக்கு (TN 59), தேனி (TN 60).
அரியலூர் (TN 61), சிவகங்கை (TN 63), மத்திய மதுரை (TN 64), இராமநாதபுரம் (TN 65),கோயம்புத்தூர் (TN 66), விருதுநகர் (TN 67), கும்பகோணம் (TN 68, தூத்துக்குடி (TN 69), ஓசூர் (TN 70), திருநெல்வேலி (TN 72), இராணிப்பேட்டை (TN 73).
நாகர்கோயில் (TN 74), மார்த்தாண்டம் (TN 75), தென்காசி (TN 76), ஆட்டூர் (TN 77), தாராபுரம் (TN 78), சங்கரன்கோவில் (TN 79), திருச்சிராப்பள்ளி (TN 81), மயிலாடுதுறை (TN 82), வாணியம்பாடி (TN 83), ஸ்ரீவில்லிபுத்தூர் (TN 84).
குன்றத்தூர் (TN 85), ஈரோடு (TN 86) நாமக்கல் (TN 88), சேலம் தெற்கு (TN 90), சிதம்பரம் (TN 91), திருச்செந்தூர் (TN 92),கோயம்புத்தூர் மேற்கு (TN 99).
இதில் கவனித்தோம் என்றால் 8, 17, 26, 35, 44, 53, 62, 71, 80, 98 ஆகிய வாகன பதிவு எண்கள் இருக்காது. இந்த எண்கள் எல்லாமே 8ம் நம்பரை கூட்டுத்தொகையாக கொண்டவை. மூடநம்பிக்கை காரணமாக இப்படி வைக்கப்பட்டதா அல்லது இதன் பின்னணி என்ன என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.