சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தொடர்பான முக்கிய தகவல்களை தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
அதில் 1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் 2023 - ஆகியவை சென்னைக்கு வெள்ளமான வருடங்கள் - சென்னை சிட்டியில் 2000 மிமீ மழை இந்த வருடம் பெய்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் 48 மணி நேரத்தில் (230 மற்றும் 239 மிமீ) 469 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலானவை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் இரவு வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை.
முழு நகரமும் 400-500 மிமீ மழையை பெற்றது, இதில் பெரும்பாலானவை 24 மணி நேரத்தில் பெய்தது. ஆவடி மிக மோசமான மழையை பதிவு செய்துள்ளது. அங்கு 564 மிமீ (276 மற்றும் 278 மிமீ) ஆகும்.
பூந்தமல்லி பகுதியில் 483 மிமீ (141 மற்றும் 342 மிமீ) மழை பெய்துள்ளது இதனால், மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தாம்பரம் 409 மி.மீ (173 மற்றும் 236 மி.மீ) அடையாறு ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்பில் மழை பெய்துள்ளது. அடையாறு ஆறும் நிரம்பி வழிகிறது. 3-வது கொசஸ்தலையாற்றில் வந்து கரைபுரண்டு ஓடுகிறது.
பூண்டியில் இருந்து ஒரு கட்டத்தில் 45000 கனஅடி திறந்து விடப்பட்டது. இந்த மழையின் அனைத்து வரலாற்று புள்ளிவிவரங்களையும் வழங்க முயற்சி செய்கிறோம்.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஆண்டுகளுடன் 2023ம் ஆண்டும் கண்டிப்பாக நினைவில் இருக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.