Tap to Read ➤

வெளியே போகும்போது குடையை மறக்காதீங்க!

Tamilnadu latest weather updates in tamil.
HTML Tamil
இலங்கை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யும்.
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
மேலும், இன்று தென்தமிழகம், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
நாளை தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
வரும் ஏப்ரல் 25, 26 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
வரும் 27இல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
கேரள கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.