Varalakshmi N       Feb 04, 2026

சுவையும் சத்தும் ஒரே கடியில் சிறுதானிய பிரெட் ரோஸ்ட்..!

இன்றைய பரபரப்பான காலத்தில் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய,       உடலுக்கு தேவையான சத்துக்கள் தரும் காலை உணவுகள் நம் அனைவருக்கும் தேவை

அந்த வகையில் பல சிறுதானியங்களை இணைத்து செய்யப்படும் இந்த சிறுதானிய       பிரெட் ரோஸ்ட் சுவையோடும் ஆரோக்கியத்தோடும் கூடிய சிறந்த டிபன் ஆகும்

சிறுதானிய பிரெட் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: சிறுதானிய கலவை ( வரகு, சாமை, குதிரைவாலி,       கொள்ளு, தினை, வெள்ளைச்சோளம், மஞ்சள் சோளம், கம்பு) தலா 1 ஸ்பூன், கோதுமை பிரெட் 10 துண்டுகள், வெங்காயம் 1, பச்சை மிளகாய் 4, பூண்டு 4 பல், நறுக்கிய கொத்தமல்லித்தழை 2 ஸ்பூன்,       வெண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு

செய்முறை: சிறுதானிய கலவையை 2 மணி நேரம் நீரில்       ஊறவைத்துகொள்ளவும்.பூண்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

இந்த விழுதை பிரெட் துண்டுகளின் ஒரு பக்கத்தில் சமமாக தடவவும். தவாவை சூடாக்கி சிறிதளவு வெண்ணெய் தடவி, தவாவில் வைத்து மிதமான தீயில் வேகவைக்கவும்.

பின் சுற்றிலும் வெண்ணை ஊற்றி மறுபுறமும் திருப்பி போட்டு நன்றாக       ரோஸ்ட் செய்து எடுக்கவும். சூடாக இருக்கும்போது தக்காளி சாஸுடன்       பரிமாறவும்

இந்த சிறுதானிய பிரெட் ரோஸ்ட் காலை நேர டிபனுக்கு மிக சிறந்த       தேர்வாகும். ஒரு முறை செய்து பாருங்களேன்!