Tap to Read ➤

கோவில் கொடிமரத்தின் சிறப்பு அம்சங்கள்...!

ஆலயத்தில் உள்ள கொடிமரத்திற்கு என ஒரு தனி முக்கியத்துவம் உண்டு.
HTML Tamil
ஆலயத்தின் பலி பீடத்திற்கு அருகே உள்ள கொடிமரம், தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் பொருத்தப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது.
“துவஜஸ்தம்பம்” என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரம், மிகப் பெரிய தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது
ஒரு ஆலயத்தை முழுமை அடைய செய்வது அந்த ஆலயத்தில் உள்ள கொடிமரம் தான். கடவுளை காண முடியாவிட்டாலும் கொடி மரத்தை வணங்குவது அவசியம்.
ஆலய கொடிமரம், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் என மும்மூர்த்திகளின் தொழில்களை உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.
நம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள 32 எலும்பு வளையங்களைப் போல கோவில் கொடிமரமும், 32 வளையங்களுடன் அமைக்கப்படுகிறது.
கொடி மரம், ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே நேரத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்.
கோவில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றப் படுகிறது. இறைவன் திருவிழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் புரிய போகிறார் என்பது இதன்மூலம் உணர்த்தப்படுகிறது.
திருவிழா நாட்களில் அந்த ஊர் முழுவதையும் தன் கட்டுக்குள் இறைவன் வைத்திருப்பதை உணர்த்தும் விதமாக, கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.
கொடிமரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்து வணங்க வேண்டும். கொடிமரத்தை வணங்கினால் இறைவனை வணங்கியதற்கு சமமாகும்.