Varalakshmi N       Jul 23, 2025

 முடி வளர்ச்சிக்கு சிறந்த ஹேர் சீரம் உணவுகள்!

முடி அழகு என்பது உடல் நலத்தை பிரதிபலிக்கிறது. தலைமுடி     அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளர எண்ணெய், ஷாம்பு, ஹேர் சீரம்     போன்றவற்றை பயன்படுத்துகிறோம்

அன்றாட உணவின் மூலம் வழங்கப்படும் சத்துகளே தலைமுடிக்கு இயற்கை ஹேர் சீரம் என்று சொல்லலாம்

முடி வளர்ச்சிக்கு சிறந்த ஹேர் சீரம் உணவுகள் என்னென்ன என்பதை     சுருக்கமாக இங்கே பார்க்கலாம்

கிவி பழம் மற்றும் வெள்ளரி இவற்றில் silica சத்து அதிகம் இருப்பதால் முடி வேர்களை உறுதிப்படுத்தும், முடியின் மேன்மை மற்றும் தழைத்தன்மையை     நன்கு பாதுகாக்கும்

வைட்டமின் E நிறைந்துள்ள முந்திரி மற்றும் பாதாமை தினமும் 4-5     சாப்பிட்டு வந்தால் முடியின் தேய்மானத்தை தடுக்க உதவும்

Biotin சத்து நிறைந்துள்ள வெள்ளைக்கொண்டைக்கடலை கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியமான சத்தாகும். அதை சுண்டல் அல்லது குழம்பாக எடுத்துக்கொள்ளலாம்

வைட்டமின் A அதிகம் நிறைந்துள்ள தக்காளி, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு தலை தோலை பாதுகாத்து, முடி உதிர்வை தடுக்க உதவும்.

ஆளி விதை, வால்நுட் (Flax seeds. Walnuts) இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் வறண்ட தலைமுடியை ஈரப்பதமாய் வைத்திருக்க உதவும். தினசரி ஒரு     ஸ்பூன் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

முடி வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்திற்கும் வெளி பராமரிப்புடன், இயற்கையான ஹேர் சீரம் போல செய்யப்படும் உணவுகள் மூலம் உங்கள் கூந்தலை     ஆரோக்கியமான முறையில் பராமரிக்கலாம்.