Tap to Read ➤

அதிஷ்டம் மற்றும் துரதிஷ்டத்தை உணர்த்தும் காகம்..!

காகம் கரைவதிலுள்ள சகுனங்கள்!!
Sidhanathan K
இறந்த நம் முன்னோர்கள் காகத்தின் வடிவில் இருப்பதாக பலர் கூறுகின்றனர். இதனாலேயே அம்மாவாசை மற்றும் அவர்களின் நினைவு நாளில், காகத்திற்கு உணவளித்து பின் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
காகம் சனி பகவானுடைய வாகனமாகும். காகம் கரைவது முதல் எச்சம் இடுவது வரை அனைத்துமே சகுன பலன்களை சொல்லும் என்று நம்பப்படுகிறது.
ஒருவருடைய பயணத்தின்போது வாகனம், குடை, காலணி அல்லது உடலில் மீது காகம் தனது சிறகால் தீண்டினால் அவருக்கு அதிக தீமையை முன் கூட்டியே அறிவுறுத்துவதாக அர்த்தமாகும்.
வெளியே செல்லும்போது நேர் எதிரே காகம் கரைந்து கொண்டே வந்தால் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
காகம் தன் குஞ்சுக்கு உணவு கொடுப்பது போல காண நேர்ந்தால் வீட்டில் நல்ல விஷயங்கள் நடைபெறும் என்பதை குறிப்பதாகும்.
பூக்கள், பழங்கள் அல்லது ஏதாவது ரத்தின கற்களை காகம் வீட்டின் முன் போட்டுவிட்டு சென்றால் அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.
வீட்டில் இருக்கும் பாத்திரம் போன்ற ஏதாவது ஒரு பொருளை காகம் தூக்கி சென்றால் அது அபசகுணம் ஆகும்.
காகம் நம் மேல் எச்சம் இடுவது நல்ல சகுனம் ஆகும். நம் மீதான திருஷ்டி போய்விட்டது என்று அர்த்தம்.
ஒரு ஊரின் மேல் காகங்கள் கூட்டமாக பறந்தால் அந்த ஊருக்குப் பெரும் ஆபத்து.
காகம் சூரியனைப் பார்த்து கரைந்தாலும், சிவந்த பொருட்கள் அல்லது மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும் நெருப்பினால் துன்பம் நேரிடும்.
நம் எதிரே இடமிருந்து வலமாகச் சுற்றிப் பறக்கும் காகம் நன்மையையும், வலமிருந்து இடமாகச் சுற்றும் காகம் தீமையையும் குறிக்கிறது.