Tap to Read ➤

உலகிலேயே அதிக (மணிக்கு 320 கி.மீ) வேகத்தில் பறக்கும் பறவை!!

பெரெக்ரின் ஃபால்கன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
Sidhanathan K
கழுகுகளின் மொத்தம் 19 வகையான ஃபால்கன் கழுகுகள் உள்ளன. அதில் பெரெக்ரின் ஃபால்கன் (Peregrine falcon) தனி ரகம்.
பலரும் ஃபால்கன் பறவையை கழுகு என நினைத்திருக்கிறோம். அனால் ஃபால்கன் பறவை இனத்தில் இருக்கிற ஒரு விலங்கு.
2 கிலோ மீட்டருக்குள் இருக்கிற இரையை டார்கெட் செய்துவிட்டால் அடுத்த நான்கு நிமிடங்களில் இரையைப் பிடித்து விடக்கூடியது.
அதாவது தனது இரையை அது கவனிப்பதற்குள் மின்னல் வேகத்தில் பிடித்துவிடுமாம். அதன் வலிமையே பார்வையும், வேகமும்தானாம்.
இன்னும் தெளிவாக சொன்னால் நம் வீட்டு சீலிங் பேன் சுற்றும் வேகத்தை விட 64 மடங்கு வேகமாக சுற்றினாலும் கூட தன்னுடைய இறக்கையை தெளிவாக பார்க்கக்கூடிய திறனுடையது.
ஒரே நேரத்தில் இரண்டு பறவைகளை கண்காணிக்கும் அளவிற்குத் துல்லியமானது.
வேட்டையாடும்பொழுது இதனுடைய கண்களை பாதுகாக்க விழித்திரை ஒன்று செயல்படுகிறது. இது ஆபத்துகளிலிருந்து கண்களைக் காப்பாற்றுகிறது.
உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களிலும் அதி வேகமாகப் பறக்கக் கூடிய ஒரே உயிரினம் ஃபால்கன் மட்டும்தான்.
நேஷனல் ஜியோகிராபி தொலைக்காட்சி, ஃபால்கன் மணிக்குக் 389 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதாகப் பதிவு செய்துள்ளது.
ஃபால்கன் பறவை இருக்கிற பகுதியில் எந்த ஒரு பறவையும் கீழாகவும், மேலாகவும் பறக்க முடியாது. ஏனெனில் நடுவானத்திலேயே தன்னுடைய இரையைப் பிடித்துவிடும்.
அதன் கால்விரல்கள் பெரியதாக இருப்பதால் ஃபால்கன் எடையை விட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்தாலும் பறக்கும்பொழுதே பிடித்துவிடும்.