Varalakshmi N       Feb 15, 2026

 மணக்கும் மணம் சுவைமிகு தலைக்கறி குழம்பு..!

தலைக்கறி குழம்பு என்பது சமையலில் முக்கிய இடம் பெறும் ஒரு சுவைமிகு உணவாகும். இது சிறப்பு நாட்களில் மற்றும் விழாக்களில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்

சுவையான தலைக்கறி குழம்பு செய்வது எப்படி ஏப்பத்தை இங்கே பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: சுத்தம் செய்த ஆட்டு தலை -1, தேங்காய் 1/2 மூடி, வெங்காயம் -8 மிளகாய் -10, மல்லி -1 தேக்கரண்டி -2, சீரகம் -3 தேக்கரண்டி, மஞ்சள்தூள் -1/2     தேக்கரண்டி, நல்லெண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை அரைத்து மசாலா தயாரிக்கவும்

தேங்காய் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். ஆட்டுத் தலிக்கறியை நன்றாக செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய்யை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து     வதக்கவும். பின்னர் அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து சில நிமிடங்கள்     வதக்கவும்

அதில் தலைக்கறி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி சிறிது நேரம்     வதக்கவும், பின் தேங்காய் பாலை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்

எண்ணெய் மேலே பிரிந்து குழம்பு பதம் வந்ததும், அடுப்பை அனைத்து     இறக்கவும்

இந்த சுவையான தலைக்கறி குழம்பை சாதம் அல்லது இடியாப்பத்துடன் பரிமாறினால் இன்னும் ருசியாக இருக்கும்