மக்கள் பொழுதுபோக்கிற்காக டிவியை நம்பி இருப்பது வெகுவாக குறைந்தாலும், மக்கள் மத்தியில் டிவி பார்க்கும் பழக்கம் இன்னும் நிற்கவில்லை.
பல வீடுகளில் செல்போன் நோண்டிக்கொண்டிருந்தாலும் ஒரு பக்கமாக டிவி ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
இன்னும் சிலரோ டிவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடவும் செய்கிறார்கள்.
ஆனால் இதுபோன்ற பழக்கத்தை தொடரக்கூடாது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
அதாவது டிவியில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி (ப்ளூ ரே) உடல் நலத்திற்கு நல்லது இல்லையாம்.
இது தொடர்பாக விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஆய்வு நடத்தியபோது, எலியின் விழித்திரை வழியாக ஊடுருவிய நீல ஒளியின் தாக்கத்தால், அப்பகுதி கருப்பு நிறமாக மாறியது.
டிவியில் இருந்து வரும் அந்த நீல நிற ஒளி, தூங்கிய பிறகும் மூளையை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும்.
அதனால் மூளைக்கு போதிய ஓய்வு கிடைக்காமல் சோர்வு உண்டாகி மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
டிவி பார்த்துக்கொண்டே தூங்குவது உடல் எடையை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
எனவே டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.