தனியா என்று சொல்லக்கூடிய கொத்தமல்லி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, கே, ரிபோஃப்ளேவின், நியாசின், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் கரோட்டின் உள்ளன.
இந்த கொத்தமல்லி விதைகளை டீ போட்டு குடித்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். இந்த தனியா விதை டீயை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இது வயிற்றில் உள்ள வாயுக்களை நீக்குகிறது. வாயுவை தவிர, சளி, இருமல், ஒற்றை தலைவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் தொற்று போன்றவற்றையும் நீக்குகிறது.
தனியா இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், அலர்ஜி தொடர்பான பிரச்சனைகள், உடல் வலி, மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இந்த தனியா விதைகள் ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது. வயிறு உப்புசம், வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளையும் போக்குகிறது.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், ஆஸ்துமா, சளி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தனியா டீயை குடித்து வந்தால் நோய்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். தனியா டீ எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.
தனியாவில் சினியோல், லிமோனின்சா ஆல்பா பினென் போன்ற இரசாயனங்கள் உள்ளன. இது உடலில் நுண்ணுயிர் பாக்டீரியாவால் ஏற்படும் சீதபேதி உள்ளிட்ட கடுமையான வயிற்றுப்போக்கை தடுப்பதோடு அந்த நுண்ணுயிரிகளை அழிக்கிறது.