இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடல்நலத்தை கவனிப்பது மிகவும் அவசியம். இயற்கை உணவுகள் மூலம் பல உடல் பிரச்சனைகளை எளிதாக கட்டுப்படுத்தலாம்
அதற்கான சில பொதுவான ஆரோக்கிய குறிப்புகள் இங்கே பார்க்கலாம்
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான வலி குறையும்
இதய படபடப்பு நீங்க, தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுவது நல்லது
எள் உருண்டை, வேர்க்கடலை, தேங்காய் அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் மூளை வலுப்பெற்று உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்க உதவும்
அடிக்கடி மார்பு வலி ஏற்படுபவர்கள், வெந்தயத்தை வேகவைத்து நன்கு மசித்து அதில் தென் கலந்து சாப்பிட்டு வர வலி குறையும்
வயிற்று வலி ஏற்பட்டால், சாதம் வடித்த கஞ்சியில் 1 ஸ்பூன் வெந்தயத்தூள், 2 ஸ்பூன் பங்கற்கண்டு சேர்த்து குடித்தால் வலி குறையும்
நீடித்த உடல் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்