Varalakshmi N       Feb 17, 2026

நெல்லி, எலுமிச்சை ரகசியம்- செம்பட்டை முடி கருகருவென மாறும்! 

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது அடர்த்தியான, கருமையான       கூந்தல்தான். ஆனால் உடல் உஷ்ணம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் முடி செம்பட்டை நிறமாக மாறும்

இதை இயற்கையான முறையில் சரிசெய்ய சில எளிய குறிப்புகளை இங்கே பார்ப்போம்

5-6  நெல்லி கனிகளை தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து,       காலையில் அதில் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரத்தில் 1-2 முறை செய்யலாம்

வாரம் ஒரு முறை முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து       தலைமுடியில் பூசி, 10 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

கேரட், பீட்ரூட் சாறுகளை சம அளவில் எடுத்து தேங்காய் எண்ணையில்       கலந்து பயன்படுத்தலாம்

இந்த குறிப்புகளை தொடர்ந்து செய்து வருவதுடன், உடல் ஆரோக்கியத்திலும்       கவனம் செலுத்தி மலசிக்கல், உஷ்ணம் வராமல் பார்த்துக்கொண்டால், செம்பட்டை நிறம் மாறி முடி இயற்கையாகவே கருமையடையும்