Varalakshmi N       Mar 19, 2026

 சுவையான சாம்பார் ரகசியம்- ஹோட்டல் சுவை இனி வீட்டில்!

வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சாம்பார் செய்வது மிகவும் எளிது. சரியான மசாலா மற்றும் செய்முறையை பின்பற்றினால் மணமும் சுவையும் மிக்க சாம்பார் செய்யலாம்

தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் – 200 கிராம், தக்காளி – 2,     புளி – சிறிதளவு, துவரம் பருப்பு – 1 கப், பச்சை மிளகாய் – 2, வெல்லம்     – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய்  – தேவையான அளவு

மசாலாவிற்கு: கடலை பருப்பு – 1 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 7, சின்ன வெங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ½ கப், சீரகம் – ½ டீஸ்பூன். இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து பொடியாக அரைத்து     வைத்துக்கொள்ளவும்

செய்முறை: துவரம் பருப்பை தனியாக வேகவைத்து கொள்ளவும். கடாயில் என்னைஊற்றி சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக     வதக்கவும்.

ஊறவைத்த புளியை கரைத்து வடிகட்டி சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்துகொதிக்கவிடவும். அரைத்த மசாலா பொடியை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்

ஒரு கொத்தி வந்ததும் வேகவைத்த பருப்பை நன்றாக மசித்து சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து கடைசியாக 1 ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்

ஒரு சிறிய கடாயில் எண்ணெய், கடுகு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை     தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். மேலே கொத்தமல்லி தூவி     அலங்கரிக்கவும்

குறிப்பு: தேவைக்கேற்ப முருங்கைக்காய், அல்லது உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்து மேலும் சுவையாக செய்யலாம். ஒருமுறை செய்து பார்த்தால் மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவீர்கள்