கோடை காலம் வந்தாலே உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் பானங்கள் மிகவும் அவசியமாகிறது.
சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் மாம்பழ லஸ்ஸி, அனைவரும் தவறாமல் குடிக்க வேண்டிய சிறந்த பானமாகும்.
கோடைக்காலத்தில் மாம்பழ லஸ்ஸி குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பழுத்த மாம்பழம்– 1, குளிர்ந்த தயிர் – 1 கப, சர்க்கரை அல்லது தேன் – 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் – சிறிதளவு, ஐஸ் கட்டிகள் – தேவைக்கு
மாம்பழத்தை நன்றாக அரைத்து, அதில் தயிர், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும்.
தயிர் மற்றும் மாம்பழம் சேர்க்கை உடல் வெப்பத்தை குறைத்து, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு உடனடி சக்தியை வழங்குகின்றன.
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றன
மாம்பழத்தில் உள்ள Vitamin C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை உயர்த்துகின்றன
தினமும் அளவாக குடிப்பதால் தோல் உலர்வை குறைத்து, சருமத்திற்கு பொலிவை தரும்
வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த குளிர்பானம், உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் தரும்.