Tap to Read ➤

விமானத்தில்  பயணித்த  உலகிலேயே உயரமான பெண்!

துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் 7 அடி 7 அங்குலம் உயரமானவர்.
HTML Tamil
துருக்கியைச் சேர்ந்த 25 வயதான ருமேசா கெல்கி, கடந்த 2014-ம் ஆண்டு, உலகிலேயே உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்தார்.
Weaver syndrome என்ற அரிய வகை மரபணு நிலைபாடே இவரின் அதீத உயரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இவ்வகை மரபணு பாதிப்பு, விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தி, எலும்புகளின் வயதை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது.
அதீத வளர்ச்சி காரணமாக, ருமேசா கெல்கி நடக்கும் போது நிலை தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பான பயணத்திற்காக சக்கர நாற்காலியையும், வாக்கரையும் ருமேசா கெல்கி பயன்படுத்தி வருகிறார்.
தற்போது ருமேசா கெல்கி, முதல் முறையாக விமானத்தில் பயணம் மேற்கொண்டு அசத்தியுள்ளார்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு 13 மணி நேரம் விமானத்தில் பயணித்துள்ளார்.
உலகிலேயே அதிக உயரமான ருமேசா கெல்கி, நேராக அமர முடியாததால், 6 இருக்கைகள் அகற்றப்பட்டு, படுத்தபடியே பயணித்துள்ளார்.
ருமேசா கெல்கிக்காக, 6 பேரின் இருக்கையை ஒதுக்கிய, துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் செயல், நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய ருமேசா கெல்கி, இது தனது முதல் விமானப் பயணம் என்றும், கடைசிப் பயணமாக இது இருக்காது எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.