Tap to Read ➤

ஊதுபத்தியில் சிகரெட்டிற்கு சமமான ஆபத்து உள்ளதாக ஆய்வறிக்கை..!!

ஊதுபத்தி புகையினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!!
Sidhanathan K
சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, சிகரெட் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வீடு முழுவதும் நறுமணம் கமழ பயன்படுத்தப்படும் ஊதுபத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும் கலந்திருக்கின்றன.
மேலும் சில வகையான ஊதுபத்திகளில் அதிக அளவு இரசாயனங்கள் உள்ளன. அவைகளால் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உட்புறச் சூழலில் விலங்குகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ஊதுபத்தியின் இரசாயனப் பண்புகள் காரணமாக நாள்பட்ட அளவில் டிஎன்ஏ (DNA) -இல் மரபணு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 64 கலவை உட்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட ஊதுபத்திகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்துவதனால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.
தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும்போது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை இரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊதுபத்தி வாசத்தை குழந்தைகள் நுகர்வதும் ஆபத்தானது. கர்ப்பிணி பெண்கள் நுகரும்போது கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊதுபத்தியிலிருந்து வெளியேறும் புகை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.