Tap to Read ➤

அண்டார்டிகா சென்று உணவு டெலிவரி செய்த இளம் பெண்!

சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவுக்கு உணவு விநியோகம்
HTML Tamil
நாம் விரும்பிய உணவுகளை, செல்ஃபோன் மூலம் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே வந்து உடனடியாக டெலிவரி செய்து விடுகிறார்கள்.
இதனால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
ஆனால், கண்டம் விட்டு கண்டம் சென்று, உணவு ஆர்டரை டெலிவரி செய்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
சென்னையைச் சேர்ந்த மானசா கோபால் என்ற இளம் பெண், 4 கண்டங்களைக் கடந்து அண்டார்டிகாவில் உணவு டெலிவரி செய்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து உணவு ஆர்டரை டெலிவரி செய்ய, 30,000 கி.மீ. தூரத்தை ஆகாயம், நீர், நிலம் என கடந்து, இந்த சாதனை செய்துள்ளார்.
உணவை டெலிவரி செய்வதற்காக, முதலில் ஜெர்மனிக்குச் சென்று, பின்னர் அர்ஜெண்டினாவுக்கு மானசா பயணித்துள்ளார்.
பின்னர் அர்ஜெண்டினாவின் Ushuaia நகரில் இருந்து அண்டார்டிகாவுக்கு விமானத்தில் பயணித்துள்ளார் மானசா.
நடுங்க வைக்கும் பனி மற்றும் சேற்றில் நடந்து சென்று, சரியான முகவரில் உணவை மானசா டெலிவலி செய்து சாதனை படைத்துள்ளார்.
மானசா கோபால் தனது தொலைதூரப் பயணத்தை ஆவணப்படுத்தும் வகையில் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 5-ம் தேதி வெளியிட்ட இந்த வீடியோவை, இதுவரை 37,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.