இந்த பச்சை இலைக் காய்கறிகள் வைட்டமின்கள், தாதுக்கள், ஃபோலேட், வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. மேலும் குறைந்த கலோரிகள் கொண்டவை.
சிலுவை காய்கறிகள் குளுக்கோசினோலேட்டுகள் எனப்படும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சேர்மங்களின் வளமான மூலமாகும்
இதில் அதிக அளவில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. கரையாத நார்ச்சத்து மலமிளக்கியாக செயல்படுகிறது. அந்தவகையில், உணவில் சேர்க்க வேண்டிய சில சிலுவை காய்கறிகளை பார்க்கலாம்.
புரோக்கோலியில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
முட்டைக்கோஸ் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
காலேவில் நிறைந்துள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
முள்ளங்கியில் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைவு. மேலும், இதில் சில கலோரிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது.