Tap to Read ➤

மூளையின் செயல் திறனை பாதிக்கும் 10 செயல்கள் எவை?

நமது மூளையை பாதிக்கும் ஆபத்தான கெட்ட பழக்கங்கள் பற்றி தெரியுமா?
Sidhanathan K
நமது உடம்பின் தலைமைச்செயலகமான மூளையைக் காக்க, சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
காலையில் உணவைத் தவிர்ப்பது மூளைக்குத் தேவையான சக்தியை குறைக்கிறது.
அதிகப்படியான உணவு மூளையில் உள்ள இரத்த நாளங்களின் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் மூளையின் சக்தி குறைகிறது.
புகைபிடித்தல் மூளையைச் சுருக்கி அல்சைமர் நோயை உண்டாக்குகிறது.
அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவதால் நமது உடல், புரதத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது. மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் மூளை பாதிப்படையும்.
நீண்ட கால தூக்கமின்மை மூளையில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வையில் கார்பன் டை ஆக்சைடை அதிகரித்து சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனைக் குறைக்கிறது.
உடல் நோயின் போது அதிகப்படியான மூளை வேலை மற்றும் தீவிர ஆய்வு மூளையை பாதிக்கும்.
மது அருந்துபவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.