Tap to Read ➤

நீங்கள் நெருங்கிய நண்பரை மணந்தால் நடக்கும் விஷயங்கள்..!!

நம்ம பெஸ்ட் ஃபிரெண்டை கல்யாணம் பண்ணலாமா..?
Sidhanathan K
திருமணத்திற்கு மணமக்கள் தேடுவதில் பல சிக்கல்கள் இருந்தாலும், காதல் திருமணம் சிறந்ததா, வீட்டில் பார்த்து வைப்பவரை திருமணம் செய்வதா என பல பிரச்சனைகள் உள்ளன.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தான் எப்போதும் எதிர்பார்க்கிறார்கள்.
இதனாலேயே பலர் தாங்கள் நெருங்கி பழகிய நண்பர்களை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.
நெருங்கிய நண்பரை விட சிறந்த வாழ்க்கைத் துணை வேறு எதுவும் இருக்காது.
அதனால் நெருங்கிய நண்பரைத் திருமணம் செய்து கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
உங்களை பற்றி ஏற்கனவே நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். அதனால் புதிதாக உங்களைப் பற்றி விளக்கமாகக் கூற வேண்டிய சிரமம் இருக்காது.
இருவரின் கெட்ட பழக்கங்கள், நல்ல பழக்கங்கள், பலம் மற்றும் பலவீனங்கள் ஒருவருக்கொருவர் நன்கு தெரியும், எனவே அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
நெருங்கிய நண்பர்களை திருமணம் செய்யும் போது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு அதீத நம்பிக்கை ஏற்படும். ஒருவரையொருவர் குறை சொல்லமாட்டார்கள்.
இருவருடைய நண்பர்களை பற்றி இருவரும் தெரிந்து வைத்திருப்பார்கள். எனவே நண்பர்களிடம் பேசினாலோ, வெளியே சென்றாலோ தேவையற்ற பயமோ, சந்தேகமோ ஏற்பட வாய்ப்பில்லை.
இருவருக்குள்ளும் அதிகபட்ச நேர்மை இருக்கும். எதையும் மறைக்காமல் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக்கொள்ளலாம். பரஸ்பர பகிர்வு இருக்கும்.
இருவருக்குள் பகிர்ந்து கொள்வதில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், ஒருவரின் முகபாவனையைப் பார்த்து மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.
புதிய ஆளிடம் பழகுகிறோம் என்ற கூச்சம் இல்லாமல் ஒருவருக்கொருவர் பழகுவதில் அதிக இணக்கமும் நெருக்கமும் இருக்கும்.
இருவரில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதல் ஆளாக ஓடிவந்து தன்னுடைய பிரச்னையாக நினைத்து தீர்த்து வைப்பார்கள் மற்றும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்.
எனவே வெளியில் தேடுவதை விட நெருங்கிய நண்பரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பது நல்லது.