Tap to Read ➤

உடற்பயிற்சிக்குப் பின்னர் எதை தவிர்க்க வேண்டும்...!

உடற்பயிற்சி முறையாகச் செய்தாலும் ஒருசிலவற்றை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
HTML Tamil
கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு மீண்டும் வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்தால் மூட்டுகளுக்கும், தசைக்கும் பாதிப்பு ஏற்படும்.
உடற்பயிற்சி செய்து முடித்ததும் குறைந்தபட்சம் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகே தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்து, அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக் கூடாது.
உடற்பயிற்சி செய்து முடித்ததும் சீஸ், பர்கர் போன்றவற்றை உண்டால் உடல் எடை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.
ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை உடற்பயிற்சிக்குப் பின் குடித்தால் உடல் எடையை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.
வியர்வையால், உடையில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் வீட்டிற்குச் சென்று உடையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பின், ஷவரில் குளிப்பதைவிட குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளித்தால் நல்லது.