Tap to Read ➤

ஆண்ட்ராய்டு பயனர்களின் வங்கி செயலிகளை குறிவைக்கும் சோவா வைரஸ் !!

இந்த மால்வேர்களின் ஆபத்துகள் என்ன?
Sidhanathan K
இந்தியாவில் சைபர் கிரைம்களை கண்டறியும் இந்தியக் கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (Indian Computer Emergency Response Team), தற்போது Sova என்ற புதிய வைரஸ் குறித்து எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பரவி பலரது மொபைல்களை ஹேக் செய்து பணத்தை திருடிய இந்த சோவா என்கிற ட்ரோஜன் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது.
இந்த புதிய வைரஸ் ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் இந்திய வங்கிகளை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ளதாக CERT தெரிவித்துள்ளது.
மொபைல் பேங்கிங் ஆப்ஸ், பேமென்ட் ஆப்ஸ், கிரிப்டோகரன்சி ஆப்ஸ் என 200க்கும் மேற்பட்ட ஆப்களில் 'சோவா' வைரஸ் தாக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வைரஸ் போலியான ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மூலம் நமது போனில் நுழைந்து நமது பெயர், பாஸ்வேர்ட், வெப் சர்ச்களின் குக்கீகள், ஆப்ஸ் விவரங்கள் போன்றவற்றை திருடுகிறது.
இது திருடப்பட்ட அனைத்து தகவல்களையும் XML பார்மட்டில் சேமித்து அதன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள சர்வருக்கு அனுப்பிவிடுகிறது.
நமது டேட்டாவைத் தவிர டைப்பிங் விவரங்கள், ஸ்கிரீன்ஷாட், வீடியோ, வாய்ஸ் ரெக்கார்டு என அனைத்தையும் கைப்பற்றும் திறன் இந்த வைரஸுக்கு உண்டு.
இந்த வைரஸ் அதிகாரப்பூர்வ வங்கி மற்றும் பிற செயலிகளைப் போலவே அதன் வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
அதாவது குரோம் மற்றும் வங்கிச் செயலியின் லோகோவைப் போலவே, கிட்டத்தட்ட இது போலி என்று கண்டறிய முடியாத அளவிற்கு இருக்கும்.
ஒரு முறை போனில் இன்ஸ்டால் செய்துவிட்டால் அதை நீக்குவது கடினம். இந்த வைரஸ் இப்போது 5-ஆம் தலைமுறை பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற மால்வேர்களைத் தவிர்க்க, முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
டவுன்லோட் செய்வதற்கு முன்னதாக அப்ளிகேஷன் குறித்த விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
இன்ஸ்டால் செய்யும்போது, தேவையற்ற அணுகலை அனுமதிக்க வேண்டாம்
குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மெசேஜ், ஈமெயில் போன்றவற்றில் வரும் லின்குகளை என்னவென்று பார்க்காமல் கிளிக் செய்ய வேண்டாம்.