Tap to Read ➤

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!

கிரெடிட் கார்டு வகைகள் பற்றிய சில விஷயங்கள்!
Sidhanathan K
கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில் அதன் மூலம் நாம் பல நன்மைகளைப் பெறலாம்.
ஆனால் கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துபவர்களை விட தவறாகப் பயன்படுத்துபவர்களே அதிகம்.
கிரெடிட் கார்டை வாங்கும் முன், உங்கள் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப சரியான கார்டை தேர்வு செய்வது அவசியம்.
அனைத்து வகையான பயன்பாட்டுக்கு உகந்த கார்டுகளில் வருடாந்திர கட்டணம் என்பது மிக அதிகமாக இருக்கும்.
பலர் தங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதைப் புரிந்துகொண்டு பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கார்டினை வாங்கும் முன்பு நிபந்தனைகள்:
எந்த மாதிரியான சலுகைகள் கிடைக்கும் ?
சலுகைகள் எவ்வளவு காலத்திற்கு கிடைக்கும் ? இணையும் கட்டணம் எவ்வளவு ?
வருடாந்திர கட்டணம் எவ்வளவு ?
இவையெல்லாம் தெரிந்துகொண்ட பின் கார்டினை பெறுவது நல்லது.
1. பயண (Travel) கிரெடிட் கார்டு

ட்ராவல் கிரெடிட் கார்டு மூலம் விமானம், பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடிகள், ரிடீம் செய்யக்கூடிய ரிவார்ட் பாய்ண்ட்ஸ், விஐபி விமான நிலைய ஓய்வறைகளுக்கான இலவச அணுகல் ஆகியவற்றைப் பெறலாம்.
2. எரிபொருள் (Fuel) கிரெடிட் கார்டு

இந்த வகையான கிரெடிட் கார்டு மூலம், ஆண்டு முழுவதும் எரிபொருள் செலவைச் சேமிப்பதன் மூலம் உங்கள் மொத்த போக்குவரத்துச் செலவைக் குறைக்கலாம் மற்றும் எரிபொருள் கூடுதல் கட்டணத் தள்ளுபடியைப் பெறலாம்.
3. ஷாப்பிங் (Shopping) கிரெடிட் கார்டு

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களில் ஷாப்பிங் செய்வதன் மூலம் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி வவுச்சர்களை பெறலாம்.
4. வணிக (Business) கிரெடிட் கார்டு

இந்த வகை கிரெடிட் கார்டுகள் வணிகத்தை விரிவுபடுத்த அல்லது வளர்ப்பதற்கான செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.
5. மாணவர் (Student) கிரெடிட் கார்டு

18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த வகையான கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் கல்லூரி தொடர்பான செலவினங்களுக்கு ஏற்றாற்போல், வெகுமதிகள், வட்டியில்லா காலங்கள் மற்றும் அபரிமிதமான தள்ளுபடிகள் போன்ற அம்சங்களை பெறலாம்.
6. கேஷ்பேக் (Cashback) கிரெடிட் கார்டு

இந்த கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 5-20% கேஷ்பேக் கிடைக்கும். இந்த கார்டுகள் பொதுவாக எரிபொருள் கூடுதல் கட்டணம், வெகுமதிகள், வருடாந்திர கட்டணங்களில் கேஷ்பேக் போன்றவற்றில் தள்ளுபடிகளை வழங்குகின்றன.
7. பொழுதுபோக்கு (Entertainment) கிரெடிட் கார்டு

திரைப்படங்கள், உணவு, பயணம் ஆகியவற்றில் தள்ளுபடிகள், வெகுமதிகள் மற்றும் பிற நன்மைகளைப் பெற பொழுதுபோக்கு கிரெடிட் கார்டுகள் பயன்படுகின்றன.