Tap to Read ➤

இயற்கை கூறும் வெற்றியின் ரகசியங்கள்

விடா முயற்சியே முன்னேற்றம் என்ற மாளிகைக்கு, முதல் வெற்றி பாதையாகும்.
HTML Tamil
ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு, மீன் கிடைக்கும் வரை தன் முயற்சியை கைவிடாது.
1000 கணக்கில் அடிவாங்கும் கருங்கல், அது சிலையாகும் வரை உளியைத் தான், உறவாக எண்ணுகிறது.
கிளைகளை மேலும், மேலும் வெட்டினாலும், நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்றன மரங்கள்.
வண்டியை இழுக்கும் எருதுகள். இரும்பும், முள்ளும் காலில் குத்தினாலும், ரணத்தைக்கூட ரசிக்கின்றன.
கால்கள் இல்லாத போதிலும், பாறைகளில் மோதியும், படுகுழியில் விழுந்தும் கடலில் கலக்கும் நதி.
துணிவும், விடா முயற்சியும் இருக்கும் வீரனே, சரித்திரம் படைத்து மாவீரனாகிறான்.