Tap to Read ➤

தனிநபர் கடன் பெறுவதற்கு முன் இதை நினைவில் கொள்க ..!!

பர்சனல் லோன் அப்ளை செய்வதற்கு முன் சில அடிப்படை விதிகள் என்னென்ன ?
Sidhanathan K
பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் இப்போது வங்கிகளில் (ஆன்லைன் பயன்முறையில்) மிக எளிதாகக் கிடைக்கிறது.
தனிநபர் கடனுக்கான தகுதி பொதுவாக மாத வருமானம், திருப்பி செலுத்தும் திறன் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இப்போது ஆவணங்கள் இல்லாமல் தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
தனிநபர் கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
எந்த ஒரு கடனையும் அதை பெற்ற பிறகு, எத்தனை தவணை முறையில் நம்மால் செலுத்த முடியும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் மட்டுமே தனிநபர் கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முன் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைச் சரிபார்ப்பது நல்லது.
வங்கிகள் பொதுவாக தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.50 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன.
தனிநபர் கடனை 15 முதல் 18 சதவீத வட்டி விகிதத்திற்கிடையில் பெறுவது நல்லது.
வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால் தனிநபர் கடனைப் பெறுவது மிகவும் எளிதானது.
கடனைப் பெறும்போது குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு முன்னதாக முழு தவணை செலுத்த வங்கிகள் அனுமதிப்பதில்லை.
தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், கடனை முன்கூட்டியே செலுத்தினால் கூடுதல் கட்டணங்கள் எவ்வளவு என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.