Tap to Read ➤

சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை...!

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் !!
Sidhanathan K
சிசேரியன் என்பது பெண்களின் உடலில் ஒரு பகுதியைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுக்கும் முறை.
இன்றைய தலைமுறை பெண்களில் பெரும்பாலானோர் உடலளவில் பலவீனமாக இருப்பதால், பிரசவம் என்றாலே சிசேரியன் என்றாகிவிட்டது.
கருவிலிருக்கும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றவும், பிரசவ வலி ஏற்படாமல் இருக்கவும், ஜோதிட நம்பிக்கையின்படி பிறந்த நேரத்தைக் கண்டறியவும் சிசேரியன் செய்யப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில், வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், உடல் உழைப்பு என பல்வேறு காரணங்களால் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ளன.
இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்போது 21.5 சதவீத பிறப்புகள் சிசேரியன் மூலம் நடைபெறுகின்றன.
சாதாரண பிரசவத்தை விட சிசேரியன் செய்வது எளிது. ஆனால் அதன்பிறகு, உடல்நிலையை மீட்டெடுப்பது, சாதாரண செயல்களில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிப்பறைக்குச் செல்வது கூட கடினம்.
சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்களுக்கு அதிக வலி ஏற்படும். இதைத் தவிர்க்க, மருத்துவர்களே சில வலி நிவாரணிகளை பரிந்துரைப்பார்கள். இது தற்காலிகமாக வலியைக் குறைக்க உதவும்.
வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிசேரியன் செய்யும் பெண்கள் புரோபயாடிக் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள நல்ல பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
சிசேரியன் செய்த இடத்தில் அதிக அழுத்தம் மற்றும் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிக்கும் தண்ணீரை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
நேரம் கிடைக்கும் போது சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் இரத்தக் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்த நிலையில் மலம் கழிக்க முயலும் போது அழுத்தம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்திருப்பது நல்லது.
மலச்சிக்கலைத் தடுக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு கனமான பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை ஏற்படுத்தும்.
சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவின் போது அதிக வலி ஏற்படும். சிசேரியன் செய்து 18 மாதங்கள் வரை கூட இந்தப் பிரச்னை வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.