Tap to Read ➤

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

சில விஷயங்களை பெண்கள் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.
HTML Tamil
குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல கூடிய பொறுப்பு வீட்டில் உள்ள பெண்ணின் கையில் தான் உள்ளது.
சக்தியின் வடிவமாக போற்றப்படும் பெண்கள், தங்களது வாழ்வில் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது முக்கியமானதாக உள்ளது.
பெண்கள் தினமும் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட வேண்டும். கோலமிடும்போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக்கூடாது.
வீட்டில் மாலை 6 மணிக்கு விளக்கேற்றிய பின்னர், வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
திருமணமான பெண்கள், கிழக்கு திசையை நோக்கி, வலது கை மோதிர விரலால் நெற்றியிலும், உச்சந்தலையிலும் குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்.
கையில் வளையல் இல்லாமல் பெண்கள் உணவு பரிமாறக்கூடாது. கணவருக்கு உணவு பரிமாறும்போது இதனை கடைபிடிப்பது முக்கியம்.
திருமணமான பெண்கள், கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மெட்டியும், கால்களில் கொலுசு அணிந்தால் பணம் புழங்கும் என்பது ஐதீகம்.
திருமணம் ஆன பெண்கள், மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
கோவிலில் தெய்வத்தை வணங்கும்போது, நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு பெண்கள் வணங்க வேண்டும்.
பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. பித்தளை, செம்பு, வெண்கலம் மற்றும் வெள்ளி தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.
பூசணிக்காய் மற்றும் சிதறு தேங்காயை, பெண்கள் உடைப்பதை தவிர்க்க வேண்டும். இவைகளை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
வெள்ளிக் கிழமை மற்றும் விஷேச நாட்களில் பெண்கள் வீட்டில் பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்தால் பாவம் வந்து சேரும் என்பது ஐதீகம்.