சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தும், நடிகை சம்யுக்தாவும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் மார்ச் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.
இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளனர். அதேபோல இருவரும் அன்பாலோ செய்துள்ளனர்.
இந்த நிலையில் முதன்முறையாக விஷ்ணுகாந்த் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் அவர்களின் பிரச்சனைக்கு சம்யுக்தாவின் அப்பாதான் காரணமாம். அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளில் அவர் தலையிடுவதால் பிரச்சனை பெரிதாகிறது.
அவர்களின் திருமணத்திற்கு முன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்துள்ள சம்யுக்தாவின் அப்பா திருமணம் முடிந்த பிறகு அடிக்கடி வீட்டிற்க்கு வருவதால் பிரைவேசி போய்விடுகிறது என்று சம்யுக்தவிடம் அவர் கேட்டிருக்கிறார்.
மேலும் அவர்கள் காதலிக்கும்போது அவர்களை பற்றி தவறாக பேசிய பெண் தோழியிடம் சம்யுக்தா அதிகமாக பேசிக்கொண்டிருந்ததால் அவரோடு எதற்காக ரொம்ப பேசுற என்று கேட்டுள்ளார்.
அதற்கு சம்யுக்தாவும் அப்படித்தான் பேசுவேன், என்னுடைய தோழி தான் முக்கியம் என்று கூறிவிட்டார். அப்படித்தான் அவர்களுக்குள் பிரச்சனை நீண்டுள்ளது.
திருமணத்திற்கு முன்பு 8 மாதங்கள் காதலித்த போது இல்லாத பிரச்சனைகள் இந்த 15 நாட்களுக்குள் ஏற்பட்டதனால் தனித்தனியாக இருக்கிறோம் என்று விஷ்ணுகாந்த் கூறியுள்ளார்.
அதோடு பலமுறை சம்யுக்தாவோடு பேசுவதற்கு முயற்சி செய்தும் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
சம்யுக்தாவை அடித்து துன்புறுத்துவதாகவும், கட்டுப்படுத்துவதாகவும் அவரைப் பற்றி பல youtube சேனல்களிலும், செய்திகளிலும் தவறாக சித்தரிப்பதாலும் விளக்கம் கொடுப்பதற்காக பேசியுள்ளதாக விஷ்ணுகாந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்யுக்தா விரைவில் பதில் அளித்தால் தான் உண்மையான பிரச்சனை என்ன என்பது தெரியவரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.