Tap to Read ➤

அதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா....?

தீரா நோயும் தீர்க்கும் திப்பிலி!
Sidhanathan K
திப்பிலி சுவையில் காரமாக இருந்தாலும் சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும்.
அதிக அளவில் திப்பிலியைப் பயன்படுத்தாமல் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
இது குடல்வாயுவைப் போக்கும் மற்றும் வயிற்று உப்புசத்திற்கான மருந்தாகப் பயன்படுகிறது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலிப் பொடியை கலந்து கொடுத்தால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும்.
திப்பிலி லேகியம் சுவாசம், வயிற்றுவலி, பெருவயிறு, ஜுரம் ஆகியவைகளை குணப்படுத்தும்.
திப்பிலிப்பொடி மற்றும் கடுக்காய் பொடி சம அளவு எடுத்து தேனில் கலந்து 1/2 ஸ்பூன் வீதம் காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குணமாகும்.
திப்பிலிப் பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்துவர இருமல், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு குணமாகும்.
திப்பிலியை பொடி செய்து வெல்லத்துடன் 1:2 என்ற விகிதத்தில் கலந்து சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நெய் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
திப்பிலியை வறுத்து பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர பசியின்மை நீங்கி வயிறு, கல்லீரல் வலுப்பெறும்.
திப்பிலி, மிளகு, தோலுரித்த சுக்கு இவைகளை சம அளவு எடுத்து வறுத்து அரை கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, தொண்டை கரகரப்பு குணமாகும்.
திப்பிலிப் பொடியை மிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால் மயக்கம் மற்றும் உணர்வின்மைகளை போக்கும்.