Tap to Read ➤

முடி நீளமா வளரணுமா ? இத யூஸ் பண்ணுங்க ..!!

முடியை நீளமாகவும் பளபளப்பாகவும் மாற்றக்கூடிய உணவு வகைகள்
Sidhanathan K
முடி வளர்ப்பிற்கு விலையுயர்ந்த பொருட்கள் தான் வேண்டும் என்றில்லை, இது போன்ற மலிவான உணவுபொருட்களும் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வாழைப்பழத்தில் உள்ள சிலிக்கா உடலில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. தொடர்ந்து பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எண்ணெய் மற்றும் முட்டை ஆகியவை ஹேர் பேக்கில் உள்ள முக்கிய பொருட்கள். மயோனைஸை ஹேர் பேக்காக பயன்படுத்தினால் முடியின் வேர்கள் அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்கும்.
புரோட்டீன் நிறைந்த முட்டையின் மஞ்சள் கருவை தலைமுடியில் பூசுவது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
சூடான ஆலிவ் எண்ணெயை உச்சந்தலையில் மற்றும் முடியில் மெதுவாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவுடன் தலைமுடியை கழுவிய பின் கண்டிஷனரைப் பயன்படுத்தி அலசவும்.
தலைமுடியில் பாலை ஒரு ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தி, ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின் கழுவினால் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும்.
டீயில் உள்ள பொருட்கள் இறந்த சரும செல்களை அகற்றுவதால் அரிப்பு மற்றும் பொடுகு உள்ளவர்களுக்கு இது சிறந்தது.
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அதை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவவும். இதை பேஸ்ட்டாக அரைத்தும் பயன்படுத்தலாம்.
பீரில் தாமிரம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஈஸ்ட், ஹாப்ஸ் மற்றும் மால்ட் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட ஏராளமான தாதுக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.