பாகற்காயின் கரடுமுரடான மேல் பகுதியை கத்தியால் லேசாக சீவி, நறுக்கி உள்ளிருக்கும் விதையை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் 2 நிமிடம் ஊற வைத்து பிறகு சமைத்தால் கசப்பு தன்மை குறைவாக இருக்கும்
பாகற்காயின் வெளிப்புற தோலை உரித்த பிறகு, உப்பை தேய்த்து சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, பின்பு சமைத்தால், பாகற்காயின் கசப்பு தன்மை பெருமளவில் குறையும்
பாகற்காய் சமைப்பதற்கு முன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பாகற்காய் துண்டுகள் மீது தயிர் ஊற்றி, பின்பு சமைத்தால், அதன் கசப்பு தன்மையை குறைக்கலாம்