கல்யாண முருங்கை மரம், ஒரு முள் உள்ள மரமாகும், இதற்கு முள் முருங்கை, முள் முருக்கு, பரிபத்திரம் என்ற வேறு பெயர்களும் உண்டு
இம்மரத்தின் இலை, தாய்ப்பாலை பெருக்கவும், சிறுநீர் பெருக்கவும், மற்றும் சிறந்த மலமிளக்கி ஆகும்
நீர்ச்சுருக்கு தொல்லை நீங்க, இம்மரத்தின் இலையை சாறு பிழிந்து காலை மாலை என்று இரண்டு வேளையும் சிறிதளவு குடித்து வந்தால், நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சலும் குணமாகும்
தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் பருமனை குறைத்துவிடும்
பிரசவித்த பெண்களுக்கு அதிக பால் சுரக்க, இந்த இலையை பருப்பு சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், போதிய அளவு பால் சுரக்கும்