Tap to Read ➤

கத்தரி வெயிலுக்கு மத்தியில்.. எங்கு மழை பெய்யும் தெரியுமா

Tamilnadu may see rain in few places near western districts.
தமிழக பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்
இன்று இடி, மின்னல் சமயத்தில் தரைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இன்றைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்
மேலும், இன்று சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
நாளை (மே 6) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்
மேலும், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் நாளை மழை பெய்யக்கூடும்
வரும் மே 07 முதல் மே 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
Start தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்...
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்