Tap to Read ➤

பல் வலியை பத்தே நிமிடத்தில் சரி செய்யலாம்...!

பல் வலி பிரச்சனைக்கு இயற்கையான முறையில் உடனடியாக தீர்வு காண முடியும்.
HTML Tamil
பல் வலியும், தலை வலியும் தனக்கு வந்ததால்தான் தெரியும் என்று கூறுவதுபோல, இரு உபாதைகளும் தாங்கிக் கொள்ள முடியாதவைதான்.
பல் வலியால் கடுமையாக அவதிப்படுபவர்களுக்கு சிறந்த வலி நிவாரணப் பொருளாக கிராம்பு விளங்குகிறது.
கிராம்பை பல் வலி இடத்தில் வைப்பது அல்லது கிராம்பால் ஆன தைலத்தை பல் வலிக்கும் இடத்தில் சில துளிகள் இட்டால் உடனே வலி சரியாகும்.
தாங்க முடியாத பல் வலிக்கு, அருகம்புல்லின் சில கற்றைகளை, வாயில் போட்டு நன்றாக மென்றால் பத்தே நிமிடத்தில் பல் வலி பறந்து போகும்.
பெருங்காயத்தை, எலுமிச்சை பழச்சாற்றில் குழைத்து, பல் வலிக்கும் இடங்களில் தடவினால், வலி குறைந்து, இரவில் நிம்மதியாக தூங்கலாம்.
கொய்யா மரத்தின் கொழுந்து   இலைகளை நன்றாக மென்று, சாறு மற்றும் சக்கையை பல் வலிக்கும் இடத்தில் ஒதுக்கினால், பல் வலி காணாமல் போய்விடும்.
பற்களில் சொத்தை ஏற்படாமல் இருக்க, இனிப்பான பொருட்களை அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி உப்புப் போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்தும், இரவில் பற்களை துலக்கியும் வந்தால், பல் வலி வருவதை தவிர்க்கலாம்.