Tap to Read ➤

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த டாப் 10 இந்திய நினைவுச்சின்னங்கள்!!

பாரம்பரிய வரலாற்று தளங்கள்!!
Sidhanathan K

1. மகாபலிபுரம், தமிழ்நாடு

யுனெஸ்கோ பாரம்பரிய தளமான மகாபலிபுரம் அதன் 7 ஆம் நூற்றாண்டின் பல்லவர் சிற்பத்திற்காக நன்கு அறியப்பட்டதாகும். 40 பழங்கால நினைவுச்சின்னங்களின் தொகுப்பு 144,984 வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்தது.
2. தாஜ்மஹால், உத்தரப் பிரதேசம்

முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜுக்காக கட்டிய இந்த அன்பின் சின்னம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். தாஜ்மஹால் 38922 பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
3. சாளுவன்குப்பம், தமிழ்நாடு

சாளுவன்குப்பம், மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு கடற்கரை குக்கிராமமாகும். அதில் நிறைய தொன்மையும் வரலாறும் ஒளிந்துள்ளன. இது 25579 வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்தது.
4. ஆக்ரா கோட்டை, உத்தரப் பிரதேசம்

ஆக்ராவின் செங்கோட்டை என்றும் அழைக்கப்படும் ஆக்ரா கோட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். யமுனை ஆற்றின் கரையில் உள்ள செங்கல் கோட்டை 13,598 வெளிநாட்டினரை ஈர்த்துள்ளது.
5. செஞ்சி கோட்டை, தமிழ்நாடு

16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட இந்த கம்பீரமான கோட்டை 10483 வெளிநாட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
6. வட்டக்கோட்டை, தமிழ்நாடு

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள இந்த கிரானைட் கோட்டை 9174 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

7. குதுப்மினார், டெல்லி

800 ஆண்டுகளுக்கும் மேலான, உலகின் மிக உயரமான செங்கல் கோபுரம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை கடந்த ஆண்டு 8456 பேர் பார்வையிட்டனர்.
8. தி ஃபோர்ட் மியூசியம், தமிழ்நாடு

40 ஏக்கர் பரப்பளவில் ராம்நாட்டின் ராஜாவால் கட்டப்பட்ட திருமயம் கோட்டை, 8422 வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்து 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
9. செங்கோட்டை, டெல்லி

ஷாஜஹானால் கட்டப்பட்டு நகரத்தில் முகலாய பேரரசர்களின் முதன்மை இல்லமாக செயல்பட்ட லால் கிலா என்றழைக்கப்படும் செங்கோட்டை 5579 வெளிநாட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
10. ராக் கட் ஜெயின் கோவில், தமிழ்நாடு

இந்த கோவிலின் பாறை சிற்பங்கள் ஜெயின் சமூகத்தினரிடையே மிகவும் முக்கியமானவை. இதைப் பார்க்க 5,432 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.