Tap to Read ➤

உலகக் கோப்பையை வென்ற டாப் 5 ஐரோப்பிய நாடுகள்!

இதுவரை 21 முறை உலகக் கோப்பை போட்டித்தொடர் நடைபெற்றுள்ளன.
HTML Tamil
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடர், கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது.
உலகக் கோப்பை விளையாட்டுத் திருவிழாவில் ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா என 32 நாடுகள் பங்கேற்கின்றன.
சுமார் ஒரு மாதம் நடைபெறும் உலக் கோப்பை கால்பந்து தொடரை கண்டுகளிக்க, கத்தார் நாட்டிற்கு ரசிகர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில், வெற்றி வாகை சூடிய ஐரோப்பிய நாடுகள் எவை எவை என்பதை தெரிந்துகொள்வோம்.
உலகக் கோப்பை போட்டியில் 4 முறை வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி, ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 1934, 1938-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில், தொடர்ச்சியாக வென்று, இத்தாலி அணி அசத்தியது.
கடந்த 1982, 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மேற்கு ஜெர்மனி அணி, 1954, 1974, 1990-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், ஒருங்கிணைந்த ஜெர்மனி கால்பந்து அணி, கோப்பையை வென்றது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஃபிரான்ஸ், 1998 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்று, சாம்பியன் ஆனது.
1966-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்திய இங்கிலாந்து, முதல் முறையாக வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், ஸ்பெயின் அணி, வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.